இனிய கவிதை உலா

இனிய கவிதை உலா இனிதே வரவேற்கிறது கவிதைகள், சிறுகதைகள், பயனுள்ள தகவல்

ஞாயிறு, 11 ஜூன், 2017

கள்ளப்பசு

இன்னைக்கு ராத்திரி மட்டும் தங்கட்டும், நாளைக் காலைல நான் கண்முழிக்கும் போது, அவன் இந்த வீட்டுல இருக்க்கூடாதுஒதவாக்கரை..ஒதவாக்கரைபி.பி. எகிற கத்திய கணவன்  தயாளனைப்  பார்த்து மிரண்டாள் கனகா.
                                “டேய், ஒங்க அப்பா ஒன் மேல கோபமா இருக்காரு, கண்ணுல படாதேடாவிரட்டினாள் விழிகளில் கண்ணீர் துளியோடு தன் பையன் வேணுவை,
கள்ளப்பசு
கள்ளப்பசு

                                ”ஈஸிசேரில் சாய்ந்தபடியே பேப்பரை படித்து கொண்டே, எல்லாம் நீ செல்லம் கொடுத்து கெடுத்து வைச்சிருக்கே, படிப்பும் சரியா ஏறல, ஒரு வேலை செய்யவும் துப்பில்லை, அவனை பெத்த்து போன ஜென்மத்து பாவம்முணகிக் கொண்டேயிருந்தார்.

            பையன் மேலிருந்த கோபத்தில் காலை டிபன், சாப்பிடஏனுங்க, வெறும் வயிற்றோட இருக்காதீங்கலோ-பி.பி- மயக்கம் வந்துட போகுது-ன்னு அக்கறையாய் சொன்ன கனகாவிற்கு… ”அப்படியே மயக்கம் வந்தாஒன் பையன் தாங்கியா பிடிக்கப்போறான், விழட்டுமே அவன் பாட்டுக்கு ஊர்சுத்த போயிடுவான்அதுக்கும் புலம்பலாய் வார்த்தைகள் வாயிலிருந்து வந்து விழந்தன.
             மதியமும் சரியாய் சாப்பிடாமல் ஒப்புக்கு சாப்பிட்டு விட்டு சற்று மதிய நேரம் தூக்கத்தில் ஆழ்ந்தார். இரவும் அப்படியே போயிற்று.

             மறுநாள் காலை அம்மா….குரல் கேட்டு எழுந்தவர்கொல்லைப்புறத்தில் பால்கறப்பவர் நின்று கொண்டிருந்தார்.
           
             ”இன்னாப்பா, இன்னைக்கு சீக்கிரமாவே வந்துட்டே
              ”ஒரு முகூர்த்த த்துக்கு போகணும், ஆதனால பால் கறந்து குடுத்துட்டு போகலாம்-ன்னு சீக்கிரமாய் வந்துட்டேன்னுதன் வேலையை ஆரம்பித்தான்.

              பசுவை மெதுவாக தடவிக்கொடுத்துவிட்டு, பால் காம்பினை பிடித்து பாலினை கறக்கும்போதே…. கன்றுக்குட்டி  தாய்ப்பசுவிடம் பால் குடிக்க கட்டியிருந்த கயிற்றை அறுத்துக் கொண்டுவர திமிறிக் கொண்டிருந்த்து.

              கன்றுக்குட்டியை குடிக்க விட்டால், பால் ஒரு ஆழாக்கு கூட தேறாது என்று  பால் கறத்தலில் ஈடுபட்டான் கோவிந்தன்.

               பால் கறந்து முடித்து, வேணுவின் அப்பாவிடம்  பெரிய சொம்பில் ஊற்றும் போதுஇன்னாப்பா இன்னைக்கு பால் குறைச்சலா இருக்கே அப்படின்னு கேட்டதற்கு . “இது நல்ல பசுன்னு நீங்க நெனைச்சா அது தப்பு”  அது மூஞ்சிய பாருங்க, இன்னா சந்தோஷம், நானும் எனக்கு தெரிஞ்ச வித்தையக் காட்டி பால் கறக்க முயற்சி செய்தாலும், அது தன் மடியை எக்கிப்பிடித்து, பாலைப் பதுக்கி வைச்சுகிடுது

             ”நான் கன்றுக்குட்டியை அவுத்துவிடறேன்இன்னா நடக்குது பாருங்கஎன்றார் பால் கறப்பவர்.

             கன்றுக்குட்டி துள்ளிகுதித்து பசுவின் மடியில் வாய் வைக்க…. பால்.. கரகரவென பெருகியது“  அதைப் பார்த்து வேணுவின் அப்பா வியக்கபால்கார்ர்அது ஒரு உயிருக்கு தாயில்லையா? அது அப்படித்தான் செய்யும், செய்யணும்அதுதான் இயற்கை என த்துவமாக உதிர்த்தார்.

             பாலை எடுத்துக் கொண்டு உள்ளே போனால்……. தெரு வாசலின் பக்கத்தில் உள்ள சன்னல் வழியாகவேணுவிற்கு நாலைந்து இட்லிகள் வைத்து, சாம்பாரும் ஊற்றிசீக்கிரமா சாப்பிடுடா, சாப்பிடுடாகண்களில்  நீர்த்துளிர்த்தவாறே மகனுடன் மண்றாடிக் கொண்டிருந்தாள் கனகா.

                                  கண்டும்காணாமல் மறுபடியும் புழக்கடைப் பக்கமே போய்…. நீதான் கள்ள  பசுன்னு பார்த்தேன், கனகமும் அப்படித்தான் இருக்கிறாள் என்று வாஞ்சையாய்  பசுவை தடவிக் கொடுத்தார் தயாளன்.



Related Posts Plugin for WordPress, Blogger... Related Posts Plugin for WordPress, Blogger...

14 கருத்துகள்:

  1. பெத்தமனம் பித்து
    அருமை நண்பரே வாழ்த்துகள்.
    த.ம.2

    பதிலளிநீக்கு
  2. பொன்னான கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. மிக்க மகிழ்ந்தேன் தங்களின் மேலான கருத்துக்கு

      நீக்கு
  4. பதில்கள்
    1. பொன்னான கருத்துக்கு தலை வணங்குகிறேன்

      நீக்கு
  5. சிலதாய்களின் பாசத்தினால் தான் சிலர் கெட்டும் போய்க்கொண்டு இருக்கின்றார்கள் . அழகான சிறுகதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி

      நீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...