இனிய கவிதை உலா

இனிய கவிதை உலா இனிதே வரவேற்கிறது கவிதைகள், சிறுகதைகள், பயனுள்ள தகவல்

சனி, 1 ஏப்ரல், 2017

துயர்நீக்க வாரீரோ ?(அம்மா கவிதை)

ஆசையாய் தூளிகட்டி
அழகாய் பாட்டிசைத்து
நேசமாய் வளர்த்த பிள்ளை
நீசமாய் ஏசினாலும்
பாசமாய் இருப்பவளே
பெற்றெடுத்த தாயவளே!


காசைத்தான் பார்ப்பதில்லை
கண்களிலே கருணைதானே!
வேசமும் தெரியாது
வெள்ளந்தி உள்ளந்தனில்
வெளுத்த தெலாம் பாலென்பாள்!
பெற்றெடுத்த தாயவளே!

அழுகின்ற குழந்தையின்
அதற்கான தேவையை
அழகாய் புரிந்தவள்தான்
அவளும்தான் அழுகின்றாள்!
பெற்றெடுத்த  தாயவளே!

யார்தான் புரிந்தனரோ ?
எவர்தான் அறிந்தனரோ ?
பெற்றெடுத்த தாயவளின்
துயர்நீக்க வாரீரோ !


-----கவிஞர் கே. அசோகன்.

Related Posts Plugin for WordPress, Blogger... Related Posts Plugin for WordPress, Blogger...

12 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெற்றது போல் மகிழ்ச்சி தங்களின் கருத்து கேட்டதால்

   நீக்கு
 2. பதில்கள்
  1. மிகவும் மகிழ்ச்சி தங்கள் கருத்து க்கு

   நீக்கு
 3. அழுகின்ற குழந்தையின் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் தாய் அழலாமா ?நல்ல பசும்பால் வாங்கித் தர வேண்டியதுதானே :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிகவும் மகிழ்ச்சி தங்கள் கருத்து க்கு

   நீக்கு
  2. மிகவும் மகிழ்ச்சி தங்கள் கருத்து க்கு

   நீக்கு
  3. மிகவும் மகிழ்ச்சி தங்கள் கருத்து க்கு

   நீக்கு
 4. அற்புதம்.தொடர வாழ்த்துக்களுடன்

  பதிலளிநீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...