சனி, 30 டிசம்பர், 2017

நதிநீர் பிரச்சினை

நதிநீர் பிரச்சினை
               ஆனந்தம் கொள்வோம் ஆனந்தம் கொள்வோம்
                                   புத்தாண்டு பிறந்த்தென ஆனந்தம் கொள்வோம்!

செவ்வாய், 19 டிசம்பர், 2017

நிலாச் சோறு-

                    முற்றத்து நிலா ஒளிவெள்ளம் பாய்ச்ச
                                                மொட்டை மாடியில் வட்டமாய் அமர
                                                வற்றாத குளத்துநீர் காற்று பாய்ந்துவர
                                                விண்மீன்கள் அதனில் துள்ள துள்ள
                                                சற்றும் குறையா போட்டியாக தான்
                                                சரசரவென துள்ளியோடும் மீன்களும் ஓட
                                                சற்றும் மனம்கோணா தாயவளும் தட்டில்
                                                சாதத்துடன் குழம்பூற்றி கையில் தந்தாள்!
 
நிலா சோறு  கவிஞர் கே. அசோகன்
நிலா சோறு- கவிஞர் கே. அசோகன்

திங்கள், 27 நவம்பர், 2017

அரியாசனம்- தினமணி கவிதைமணி தந்த தலைப்பில்

அரியாசனம்- கவிதைமணி
                                சித்தார்த்தன் அரியணை துறந்த தாலே
                                சீர்மிகு புத்தனென்றே புகழ் பெற்றார் !
                                பத்துதிங்கள் சுமந்தவள் கரு வறையும்
                                பாரினில்  சிறந்த அரியணை யாம்!
                                கத்துங்கடல் ஆழத்திலே மூழ்கி யுள்ள
                                கடற்சிப்பி  முத்துதனின்  அரியணை யாம்!
                                கானகுயில் இடுகின்ற  மூட்டைக்கு தான்
                                காகத்தின் கூடே நல்ல அரியணை  யாம்!
அரியாசனம்
அரியாசனம்

செவ்வாய், 7 நவம்பர், 2017

எலியும் பூனையும் -சிறுவர் பாடல்

எலியும் பூனையும்- பொம்மி இதழில் வெளியான சிறுவர் பாடல்
எலியும் பூனையும் சிறுவர் பாடல்

வெள்ளி, 3 நவம்பர், 2017

கருப்பும் சிவப்பும்

கருப்பும்சிவப்பும்
கரியநிற பொருட்களையே கண்டு விடின்
காத தூரம் ஓடிடுவான் கார்மேகம் தான்
கரும்மேக கூட்டத்தை காணா மலே
கூட்டுப் பறவையென முடங்கி டுவான்
கருமைநிறக் கண்ணனின் எழிலைக் கூட
கண்கொண்டு பார்க்கவே தயங்கி டுவான்
கரியநிற வேழத்தின் அருகில் கூட
கணநேரம் நிற்காமல் நகன்றிடு வானே!
இனிய கவிதை உலா
கருப்பும் சிவப்பும்

கரியநிற மென்றாலே ஏனோ கார்மேகம்
காத்தூரம் ஓடுகின்றாய் என்றே வினவி
கரியநிற குயில்தான் அழகாய் கூவும்!
காதோரம் அதனினிமை நன்றாய் கேட்கும்
கரியநிற காக்கையே பகிர்ந்(து) உண்ணும்
கருத்தாக சொன்னால் காதிலே விழாது
கரியநிற பெண்ணொருத்தி கண்ட ஓர்நாள்
கருப்பியென கேலிசெய்து ஒதுக்க லானான்

 கரியநிற மேகம்சூழ் மாலைப் போழ்தில்
 கானகத்து மலைப் பாதை தன்னில்
 சரிவான பாதையிலே சறுக்கும் போது
 சட்டென கரம்தந்தவள் கரிய நிறத்தாளே!
 அரிதான அந்திமஞ்சள் பொழுது தன்னில்
 அகண்டதொரு பள்ளத்திலே விழுந்துவிட
 சிரித்தே சிவந்தவள் கேலி செய்தாளே!
 நிறம்கருப்பின் நேர்மை தெரிந்த வானான்!திங்கள், 16 அக்டோபர், 2017

கூடுகள் தேடும் பறவைகள் தீபாவளி கவிதை

              நீண்டு கிடக்கும் சோக பாதையில்
                                நெளிந்தே வளைந்தும் போகின்றான்
                                வேண்டும் கடவுள்கள் எல்லாம்
                                வேடிக்கை மட்டும் பார்க்கிற தாம்
                                ஆண்டுகள் தோறும் வந்தே நிற்கும்
                                அதையே தீபாவளி என்றழைப்போம்
                                தீண்டா இன்பம் தேடும் ஏழைக்கோ
                                தீபாவளி விழா  தீராவலியாகும்

ஞாயிறு, 8 அக்டோபர், 2017

அன்பின் சொற்கள்

உள்ளிருக்கும் ரோஜாவில் முள்ளிருப்பு
உளமெல்லாம் அவளின் நினைப்பு
கள்ளிருக்கும் பார்வயாலே அழைப்பு
கனிந்துவிட்ட அன்புக்கா எதிர்ப்பு
புள்ளிருக்கும் சோலையிலே சலசலப்பு
பூங்கொடியாள் நெஞ்சினிலே சலசலப்பு
கள்ளியவள் பூத்தாளே புன்சிரிப்பு
கணநேரம் காணாவிடின் மனந்துடிப்பு

கவிஞர் கே. அசோகன்.

 
அன்பின் சொற்கள்
அன்பின் சொற்கள்

வெள்ளி, 6 அக்டோபர், 2017

ஊர்சுற்றினார்


ஒரு மூக்கு கண்ணாடி
 ஒரு முழத்துண்டு
 இடையில்
ஒரு ஊன்றுகோல்
 நடக்க
இதுவே அடையாளம்
மகாத்மா காந்திக்கு
ஊர்சுற்றினார்
சுதந்திரம் பெற்றுத்தர

இப்பொழுதும் ஊர்சுற்றுகிறார்
பணமென்னும் தாள்களின் வழியே !
 --கே. அசோகன்.

வியாழன், 5 அக்டோபர், 2017

தத்துவம் பாஸ்

பூவுல சிக்குன நார் மணக்கும்
                சேத்துல சிக்குன கார்டயர் நாறும்


     இலட்சம் ரூபாய் முதல் போட்டா முதலாளி
     இலட்சியம்ன்னு வாய்-முதல் போட்டா அரசியல்வாதி


     சோப்பு போட்டா நுரைக்கும்
     ஆப்பு வைச்சா நுரைக்குமா ?

     மாய்ஞ்சு மாய்ஞ்சு மேக்கப் போட்டாலும்
     மசக்கைக்குப் பின்னால அழகு மட்டுதான்!

                அம்மா-ன்னு வாய்நிறைய கூப்பிட்ட பிள்ளை
     “சும்மா இரு-ன்னு சொன்னா வளர்ந்திடுச்சுன்னு அர்த்தம்!புதிய ஓட்டம்-கவிதைமணி

புதிய ஓட்டம்-கவிதைமணி
திணமனி  வலைத்தளத்தில் பதிந்து மீள்பதிவு
                                புலர்பொழுதின் காலையிலே கதிர் பரப்பும்
                                பகலவன் பயணமும் பூங்காவின் உள்ளே
                                மலரொன்றைத் தழுவி புத்துணர்வை ஊட்ட
                                மணம்தான் எங்கும்வீச புதிய ஓட்டமாமே!

புதன், 4 அக்டோபர், 2017

மல்லிகையை

                   பொருளென்றால் பேய்காக்கும் பிணங்க ளெல்லாம்
                   பேராசைக் கொண்டேதான் வாய்பி ளக்கும்
                   அருளென்றால் அதென்ன எங்கே என்றே
                   அகிலத்தின் மாந்தரெல்லாம் கேள்வி கேட்பார்
                   கருவறையில் கண்மூடிக் கிடந்த போழ்தில்
                   காசைத்தான் அறிந்தோமோஇல்லை இல்லை!
                   குறுநகையோ வாயிதழ்கள் நல்கும் ஆனால்
                   கொடுநெஞ்சம் பிறிதொன்றை உரைத்து சாடும்!


வெள்ளி, 29 செப்டம்பர், 2017

அரைக்கரண்டி நெய்யதிகம்

            கோள்திரியும் வானத்தை எட்டு வதற்கு
            குறும்பலகை மீதேறி போக லாமோ ?
            தோள்துவண்டு  மெலிந்துள்ள வாலிப னோடு
            தொடைதட்டி சண்டை யிடுதல்  முறையோ?
                                நாள்பார்த்து நட்சத்திர வேளைப் பார்த்து
அரைக்கரண்டி நெய்யதிகம்
அரைக்கரண்டி நெய்யதிகம்

வியாழன், 28 செப்டம்பர், 2017

முத்தம்போல் இனிக்கும்

முத்தம்போல் இனிக்கும்
           முத்தம்போல் இனிக்கும்சொல் வேறி ல்லை
                        முழுநிலாபோல் ஓளிதரும் விளக்கு மில்லை
                        த்தைப்போல பேசுகின்ற பறவை யில்லை
                        தென்றல்போல் சுகம்தரும் காற்று மில்லை
                        புத்தகம்போல நல்லதொரு தோழ னில்லை
                         பொன்போல பெண்கவரும் நகையி ல்லை
                        கத்துங்கடலென ஆர்ப்பரிக்கும் ஓசை யில்லை
                        கன்னித்தமிழ்போல்  இனிக்கும் மொழி யில்லை
          
முத்தம்போல் இனிக்கும்
முத்தம் போல் இனிக்கும்

திங்கள், 18 செப்டம்பர், 2017

ஞாயிறு, 10 செப்டம்பர், 2017

ச்சும்மா தமாஷ் கவிதை

              அ-ன்னா ஆன்னா ஆடிப்போனா ஆவணி !
                                -ன்னா தாவன்னா தமன்னா போட்டா தாவணி!
                                -ன்னா இயன்னா ஐப்பசி போனா கார்த்திகை!
                                இலியான்னா பேசினா தமிழ் வார்த்தைகள்!
                                -ன்னா -வன்னா ஊருக்கு போனா ஊர்மிளா!
                                ஊருக்குள்ளாற நல்லதொரு தேர்விழா!
                                -ன்னா -வன்னா எதிர்த்த வீட்டு கோமளா!
                                இழுத்துகிட்டு ஓடினா உங்களுக்கு கோபமா?
                                -ன்னா ஐயன்னா ஜன்னலோரம் பொண்ணுதான்!

                                ஜன்னலோரம் பொண்ணுமேல ஐயாவுக்கு கண்ணுதான்
ச்சும்மா தமாஷ் கவிதை
ச்சும்மா தமாஷ் கவிதை
குறிப்பு- கவிஞர் பெருமக்கள் கோபம் கொண்டு ஏவுகணைக் கவி்தைகளை செலுத்தி விடாதீர்கள் 

வியாழன், 7 செப்டம்பர், 2017

அனிதாவுக்கு கவிதாஞ்சலி

              மருத்துவர் கனவு மண்ணானதுஅரும்பு
                                மலரொன்று மண் போனது!
                                கருத்தாய் படிப்பு வீணானதுகாலம்
                                காலனை உடன் சேர்த்த்து
அனிதாவுக்கு கவிதாஞ்சலி
புகைப்படத்தை கிளிக் செய்தும் படிக்கலாம்

வெள்ளி, 1 செப்டம்பர், 2017

கற்பனையே, உண்மையும் ஆகலாம் கமல்

நிழலின் வாயிலாக ரசிகர்களை இதுவரை ஆட்சி செய்து உலக நாயகனாக வலம் வந்து கொண்டிருந்த  திரு. கமலஉறாசன், சின்னத்திரையிலும் கண்சிமிட்டி விளையாடிக் கொண்டிருக்கின்றவரைவருவாயா? அரசியலுக்கு, வந்து விடுவாயா? உனக்கென்ன தெரியும் அரசியல்ஊழலைப் பற்றி ஊதுகுழலாய் ஊதுவது உதவாது, உன் வேலையைப் பாருஎன்று சொடுக்குகளால் சவால் விட்டு, அவர் ஒரு ரோஷப்பட்டு அரசியலுக்கு வந்துஅமைச்சராக ஆகி விட்டால்….
கற்பனையே, உண்மையும் ஆகலாம் கமல்
கற்பனையே, உண்மையும் ஆகலாம் கமல்

வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

ஆற்றங்கரை அமர்பவனை

                உள்ளத்தை உறைவிட மாக்கிய எமக்கு
                                    தெள்ளிய அறிவும் தீந்தமிழும்அள்ளித்தர
                                    வெள்ளருக்கம்பூ சூடிடும் வேழமுகத் தோனே
                                    வா என்றும் விரைந்தே!
ஆற்றங்கரை அமர்பவனை
ஆற்றங்கரை அமர்பவனை

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

உயரம்

   “அண்ணே…. “இன்னான்னு தெரியல…. இவர் இந்த அப்பார்ட்மென்ட் வந்த பிறகு ரொம்ப டல்லா இருக்காரு…..அங்க கிராமத்துல தனி வீட்டுல இருக்கிற வரைக்கும்…..துள்ளி குதித்துபக்கத்து வீட்டுக்காரங்களாம்…..என்னடி அம்பு ஒன் புருனுக்கு வயசு திரும்புதோ என கிண்டல் செய்வார்கள்.   இப்ப துவண்டு கிடக்குறாரு….”இப்படி முறையிட்டாள் அம்புஐம்
http://kavithaigal0510.blogspot.com
உயரம்

வியாழன், 10 ஆகஸ்ட், 2017

நதிக்கு பாடலா ?

நதிக்கு பாடலா ?

          உனை தேடி அலைகின்றோம் உயிர் வாழவே                          
        ஓடோடி வருவாயா ? மண்மீது  எமைத் தேடியே !

http://kavithaigal0510.blogspot.com
நதிக்கு பாடலா ?

புதன், 2 ஆகஸ்ட், 2017

இன்னாய்யா நீ ஆம்பள

“”தஸ்புஸ்ஸென்று மூச்சிரைத்தபடியே  “அடியே, உமா என்னால முடியலைடிஎன்னை விட்டுடுடிகதறினார் இமயவரம்பன்
                                “அதெப்படி விடமுடியும், வருஷா வருஷம் ஏமாத்துறாங்க… வரமாட்டேங்கறாங்க…. இந்த வருஷம் நடந்தே ஆகணும்…,  ஒங்க வயசுக்கும்…. அனுபவத்துக்கும் இத செய்ய முடியலைன்னா இன்னாய்யா நீ ஆம்பள”  ஒரு போடு போட்டாள்
http://kavithaigal0510.blogspot.com
இன்னாய்ய நீ ஆம்பள -இனிய கவிதை உலா

ஞாயிறு, 30 ஜூலை, 2017

நதியோர நாணல்

         நதியோர நாணல்
           நதியோரத்து நாணலை
            எள்ளி   நகையாடியது
           அருகிலிருந்த
           நெடிதுயர்ந்த மரம்

ஞாயிறு, 23 ஜூலை, 2017

எறும்பினை உற்றுப்பாரு

                             எறும்பினை உற்றுப்பாரு  சுறுசுறுப்பை சொல்லி தரும்!
                                கரும்பினை கடித்துபாரு  சுவையினை அள்ளி தரும்!

Related Posts Plugin for WordPress, Blogger...