இனிய கவிதை உலா

இனிய கவிதை உலா இனிதே வரவேற்கிறது கவிதைகள், சிறுகதைகள், பயனுள்ள தகவல்

வெள்ளி, 16 டிசம்பர், 2016

கன்னத்தில் ஈவது

    உச்சி மோந்து அன்னை
வாரியணைத்து வழங்குவது!

அரைகுறை மனதோடு
ஆசைக் காதலி அளிப்பது!


காணொளியிலும் கண்டு மகிழ்க
கள்ளமிலா குழந்தைகள்
கன்னத்தில் ஈவது

கடனாக கொடுத்தாலும்….
கச்சிதமாய் திரும்புவது!

கட்டில் அரங்கிற்கான
அச்சடிக்கா கடவு சீட்டு

இருவரின் இசைவோடு
ஏகாந்தத்தில் ஏகுவது!

ரதிமன்மதனின்
நில்லாமல் ஓடுகின்ற
இரதம்!

உணர்ச்சி வேகத்தின்
வேகத்தடை!

சொல்லும் போதே
இனிக்கும்…..
முத்தம்….. முத்தமே!


                       
--- கே. அசோகன்.

Related Posts Plugin for WordPress, Blogger... Related Posts Plugin for WordPress, Blogger...

10 கருத்துகள்:

  1. இதைதான், ஈவது விளக்கேல் என்று சொன்னார்களோ :)

    பதிலளிநீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...