இனிய கவிதை உலா

இனிய கவிதை உலா இனிதே வரவேற்கிறது கவிதைகள், சிறுகதைகள், பயனுள்ள தகவல்

ஞாயிறு, 16 அக்டோபர், 2016

சீக்கிரமா மேலே!- சிறுகதை

கொஞ்சம் தடுமாறித்தான் போனான் கனேஷ்.. அவனுடைய சர்வீஸில் இதுவரை திக்குமுக்காடியதில்லை. ஆனால் இன்றோ…” தலையைப் பிய்த்துக் கொள்வது போல இருந்தது அவனுக்கு.

                
சீக்கிரமா மேலே
சீக்கிரமா மேலே!- சிறுகதை
   பிரபல தொழிலதிபர் மரணம்தான் அவனை அலைக்கழித்ததுதொழிலதிபர் மரணத்துக்கும்இவனுக்கும் என்ன தொடர்பு.. ”யாரோ கேட்பது புரிகிறது. கனேஷ் பிரபல துப்பறியும் நிபுணர்  
                   
 இந்த மரணத்தில்தொழலதிபரின் அலுவலகத்தில், வீட்டில் உள்ள எல்லோர் மீதம் சந்தேகப்பார்வையை பதித்தும் ஒன்றும் பிடிபடாமல்   ..யோசித்து..யோசித்து..  குழப்பத்தில் இருந்தான்.
                         வீட்டைச் சுற்றி சுற்றி பார்த்த்தில் ஒரு தடயமும் சிக்கவில்லை.
               
 அவர் ஆபிசில் போய் பார்த்தான். எல்லோரையும் கூப்பிட்டு விசாரணை செய்தான். ஒரு தடயமும் அவன் கையில் சிக்கவில்லை . அவர் டேபிளில் How to gone up shortly என்ற ஆங்கில நாவல் ஒன்று இருந்த்து போதாதென்று அவர் அறையில் ஏராளமான புத்தகங்கள் சிதறி கிடந்தன.
                                 
தொழிலதிபரின் அலுவலகத்தில் இருந்து திரும்பினான். பேருந்தில் பயணிக்கும் போதுடிரைவர் மயிலாப்பூர் ஒன்ணுஎன்றான். அவரும் டிக்கெட்டை கொடுத்தபோதுதான் . பளிரென அவன் மூளையில் மின்னலாக பளிச்சிட்டது.
                                 
மறுநாள்தொழிலதிபரின் செகரட்டரியிடம் மீண்டும் குடைந்து…..” உண்மையைச் சொல்லு…. குற்றவாளியை கண்டுபிடிச்சுட்டேன்என்றான்.
                 ஸாரோட ஊர்ல இருந்து ஒரு பையன் வந்தான்.                   
                 
அவன்தான்ஐயாஇத படிச்சா சீக்கிரமா மேலே  போகலாம்ன்னு சொன்னாங்க, ஒங்க ஞாபகம் வந்த்து என்று கொடுத்தான். ஸாரும், அவனைக் கட்டியணைத்து அவனுக்கு ஆயிரம் ரூபாய் தாளும் கொடுத்தனுப்பினார். அவள்மீது பார்வையைக் கடுமையாக்கினான்
                          
    ஸார்இல்லே அது வந்து ஸார் என இழுத்து..இழுத்து  புத்தகத்தை பரிசாக வழங்கியவன் விலாசத்தை தயங்கி .தயங்கி  கொடுத்தாள்.
                             
பையனை விசாரித்த்தில்…..ஆமாம் ஸார் நான்தான் அவரைக் கொலைச் செய்தேன். என்ற ஒப்புக் கொண்டு ஸாருக்கு புத்தகம் படிக்கும்போதுஒவ்வொரு பக்கம் திருப்பும்போதும் எச்சில் தொட்டு திருப்புவார். நான் அதைப்பயன்படுத்திகிட்டேன். ஒவ்வொரு பக்கத்திலேயும் ஓரத்தில ஸ்லோ பாய்சனைதடவி காயவைச்சு அவருக்கு பரிசா கொடுத்தேன் ஸார்.
                                
    அவரைக் கொன்னதுல எனக்கு திருப்தி ஸார், ” என்னையும்என் கூட பிறந்தவளையும் ஆனாதையாக்கனது அவருதான் ஸார்ஆதரவில்லாத அம்மாவை ஆசைவார்த்தைக் காட்டி அனுபவிச்சிட்டு அம்போன்னு விட்டுட்டு போய்ட்டார் அதனாலதான் கொன்னேன் ஸார் இப்போ திருப்திதான் ஸார் என்றான்.
                                  
  சரி கூடப்பிறந்தவள்ன்னு சொன்னியே, ஒன்னோட தங்கச்சியா? கல்யாணம் கட்டிக்குடுத்திட்டியா
                           
     இன்னும் இல்லே ஸார், இந்த திட்டம் சக்ஸ்ஸ ஆனபிறகுதான் கல்யாணம்-ன்னு அக்கா சொல்லிட்டா. என்றான். எங்கே கூப்பிடு ஒங்க அக்காவை என்றான் கனேஷ்.
                                 
   இல்லே ஸார், அவ வந்து என இழுத்து..இழுத்து. அவன் முடிப்பதற்குள்

                    
    ஏன்டாபுத்தகத்தை எல்லாரும் நல்லதுக்கு பயன்படுத்துவாங்க நீயும் ஒங்க அக்காவும்  கொலை பண்ண பயன்படுத்தி இருக்கீங்க. நல்ல புத்தகங்கள் உண்மையான தோழன் சொல்லுவாங்க, நீங்க தவறான காரியத்திற்கு பயன்படுத்தீட்டீங்கதொழிலதிபரோட செகரட்டரிதானே  ஒங்க அக்கா என்று அந்த கேஸை கச்சிதமாக முடித்தான் கனேஷ்
                                   
                        


Related Posts Plugin for WordPress, Blogger... Related Posts Plugin for WordPress, Blogger...

10 கருத்துகள்:

 1. ஆம், தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 2. படிச்சாலும் இறப்பு வரும்னு தெரிஞ்சிகிட்டேன் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மேலான கருத்து வழங்கி உற்சாகபடுத்தி வருவதற்கு மிக்க நன்றி

   நீக்கு
 3. பதில்கள்
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிகவும் மகிழ்ச்சி

   நீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...