இனிய கவிதை உலா

இனிய கவிதை உலா இனிதே வரவேற்கிறது கவிதைகள், சிறுகதைகள், பயனுள்ள தகவல்

வியாழன், 11 ஆகஸ்ட், 2016

கண்ணாடியா ?

பொழுது புலர்ந் து
காலை எழுந்தவுடன்
கண்ணாடி பார்த்தேன்!


கண்ணாடியா ?
கண்ணாடியா ?

தூக்கத்தின் சுவடுகள்
தொலையாது இருந்தன
தெளிந்த பின்னே
கவலைகளின் சாயல்கள்
முகத்தில் படிந்தன!

மீண்டும் கண்ணாடி பார்த்தேன்
கவலைகளின் சாயல்களை
கண்ணாடி காட்டிற்று !
கடிந்து கொண்டேன் !
கண்ணாடியை….
கண்ணாடியும் என்னை
கடிந்து கொண்டது!

பேருந்து கிட்டுமோ என கவலை !
பேருந்து கிட்டினால் இருக்கை கிட்டுமோ
என கவலை !
இருக்கைக் கிட்டினால்
சன்னலோர இருக்கைக்கு கவலை !

சன்னலோர இருக்கையில்
காற்று நன்றாய் வருமா என கவலை !
காற்று நன்றாய் வந்தால்
காலையிலேயே தூங்கி விடுவோமோ
என கவலை

நிறுத்துமிடம் வந்தால்
பேருந்து நிற்குமோ என கவலை!
அலுவலகத்தில் வேலை கவலை
வேலையில் பதவி உயர்வு கவலை!
பதவி உயர்வில் மாறுதல் கவலை !
கவலையோகவலை
இந்த கவலைத் தோய்ந்த முகத்தை
கண்ணாடியில் காட்டிடவே கவலை!
Related Posts Plugin for WordPress, Blogger... Related Posts Plugin for WordPress, Blogger...

14 கருத்துகள்:

 1. இந்த கவலைகளோடு போராடித்தான் ஆக வேண்டும் ,அதான் வாழ்க்கை :)

  த ம வாக்கு போட முடிய வில்லை !No Such Post என்றே வருகிறது ,சரி செய்யவும் !

  பதிலளிநீக்கு
 2. தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி, எப்படி சரி செய்ய வேண்டும் தெரியவில்லை முயற்சிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. இவ்வளவு கவலையா இதுவே எனக்கு கவலையை கொடுக்கின்றது நண்பரே

  பதிலளிநீக்கு
 4. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி, கவலைப்படாதீர்கள்

  பதிலளிநீக்கு
 5. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 6. இப்படி எதையாவது கண்ணாடி காட்டிவிடும் என்பாதால் எழுந்தவுடன் கண்ணாடியையே நான் பார்ப்பதில்லை

  பதிலளிநீக்கு
 7. அவசர அவசரமான உலகம்;
  "ஹாய்" "ஹலோ" வோடு அன்பை நிறுத்திக்கொள்ளும் காலம்!

  முடிக்க... முடிக்க... ஓயாத அலுவலக வேலை;
  கஷ்டப்பட்டு பெற்ற பட்டறிவின்
  பலன் நிம்மதியில்லாத வாழ்க்கை!

  குடும்பம், குழந்தைன்னு சுருங்கிய வட்டம்;
  அக்கம் பக்கம் நலம் விசாரிக்க ஆளாளுக்கு இல்லை நேரம்!

  அடுத்த நாளைப்பற்றி வாட்டும் கவலை;
  உன்னத வாழ்வை உலகத்துக்கடுத்த காரியங்களில் வித்துப்போட்ட கதை!

  அழியும் ஆத்துமாக்கள் அனேகம்
  அறுவடைக்கு ஆட்களின் தேவை அதிகம்!

  ☀... ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார். யோவான் 12 :26☀அவசர அவசரமான உலகம்;
  "ஹாய்" "ஹலோ" வோடு அன்பை நிறுத்திக்கொள்ளும் காலம்!

  முடிக்க... முடிக்க... ஓயாத அலுவலக வேலை;
  கஷ்டப்பட்டு பெற்ற பட்டறிவின்
  பலன் நிம்மதியில்லாத வாழ்க்கை!

  குடும்பம், குழந்தைன்னு சுருங்கிய வட்டம்;
  அக்கம் பக்கம் நலம் விசாரிக்க ஆளாளுக்கு இல்லை நேரம்!

  அடுத்த நாளைப்பற்றி வாட்டும் கவலை;
  உன்னத வாழ்வை உலகத்துக்கடுத்த காரியங்களில் வித்துப்போட்ட கதை!

  அழியும் ஆத்துமாக்கள் அனேகம்
  அறுவடைக்கு ஆட்களின் தேவை அதிகம்!

  ☀... ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார். யோவான் 12 :26☀

  பதிலளிநீக்கு
 8. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  பதிலளிநீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...