இனிய கவிதை உலா

இனிய கவிதை உலா இனிதே வரவேற்கிறது கவிதைகள், சிறுகதைகள், பயனுள்ள தகவல்

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

வைரமயமாய்

முக்கால் சதவீத நீராய்
இந்த பூமி !
முக்கால் சதவீதம் நீராய்
இருப்பதும் நாம் !
http://kavithaigal0510.blogspot.com
வைரமயமாய்
படத்தை சொடுக்கி இரசிக்கவும்விளைந்திடுமே பூமியில்
பூக்களும்….புற்களுமே !
விளைந்திடுமே மனதில்
நல் எண்ணங்களும்….
தீய எண்ணங்களுமே !

தோண்டினால் பூமியில்
தங்கப்பாளங்களும்
வைரங்களுமாய் !
தோண்டினால் நம்மை
தங்கம் என்ற அன்புமயமாய்
அமைதி என்ற வைரமயமாய் !

வானத்தை நோக்குமே பூமி
மழைத்துளிகளுக்காய் !
வானத்தை நோக்குவோம்
சிந்தனைத் துளிகளுக்காய் !

ஐம்பூதக் கலவையே பூமி
ஐம்பூதக் கலவையே நாம் !
பிரபஞ்சத்தில் சிறுபுள்ளி பூமி
பூமியே சிறுபுள்ளி என்றால் ..
அதனினும் சிறுபுள்ளி நாம்!

பிரபஞ்சத்தின் ஆட்சியில்
ஆடுகிறதே இந்த பூமி !
பூமியின் ஆட்சியில்
ஆடுகிறோமே நாம் !

இதற்கா இத்தனை ஆர்ப்பாட்டம்!
தன்னை உணர்ந்தால் பூந்தோட்டம்!
புதிரா ? புயலா வாழ்ந்து பார்!
புதுயுக சரித்திரம் வரைந்து பார் !Related Posts Plugin for WordPress, Blogger... Related Posts Plugin for WordPress, Blogger...

11 கருத்துகள்:

 1. #ஐம்பூத கலவையே நாம் #
  இதைதான் ,அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் என்று சொன்னார்களா :)

  பதிலளிநீக்கு
 2. பதில்கள்
  1. தங்களின் மேலான வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

   நீக்கு
 3. பதில்கள்
  1. கருத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி

   நீக்கு
 4. அருமை நண்பரே தன்னம்பிக்கையான வரிகள்
  த.ம. 2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கருத்துக்கும் வாக்களித்தமைக்கு மிக்க நன்றி

   நீக்கு
 5. அனைவருக்கும் வணக்கம்

  புதியதாக உதயமாயிருக்கும் (superdealcoupon.com)நமது தளம் .இந்த தளத்தின் சிறப்பு இந்தியாவில் முதன்மையான ஆன்லைன் ஷாப்பிங் தளம் மற்றும் மொபைல் ரீசார்ஜ் ஆகிய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆபர் பற்றிய தகவல்களை உங்களிடம் பகிர்ந்து உங்கள் பணத்தை யும் உங்கள் நேரத்தையும் சேமிப்பதே எங்கள் கொள்கை .

  நன்றி

  நமது தளத்தை பார்க்க Superdealcoupon

  பதிலளிநீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...