இனிய கவிதை உலா

இனிய கவிதை உலா இனிதே வரவேற்கிறது கவிதைகள், சிறுகதைகள், பயனுள்ள தகவல்

வெள்ளி, 8 ஜூலை, 2016

தோல்வியை தொடாதவங்க

                நூலகத்திலே புத்தகத்தை தேடும்போது தற்செயலா தமிழ் தனிப்பாடல் திரட்டு-ன்னு ஒரு புத்தகம் கையில சிக்கிக்கிச்சுவிட்டுடுவேனாக்கும்….அலசி ஆராய்ந்தா…. ஒரு புலவர் பாடல் எழுதி இருக்காரு. அது இன்னான்னா….  இந்தந்த இராசிக்காரர்கள் இப்படி..இப்படிஅப்படி..அப்படி-ன்னு. அம்புட்டேதான். அதை கவனமா குறிச்சு வைச்சுஇப்ப ஒங்க பார்வையில….
                       நீங்கள் மேஷ ராசியா? -  ஒங்களை யாருமே எதிர்க்க கூடாது. நீங்கதான் ராஜா, நீங்கதான் மந்திரி..அப்படி ஒரு நினைப்பு  சரியா
                      உங்களது ரிஷப ராசியா--- ”ஒங்க கிட்ட யாரும் நெருக்கமா இருந்திடப்படாது, அப்படி நெருக்கமா இருந்தா ஒங்களுக்கு பிடிக்காது என்பது ஒங்களுக்குத்தானே தெரியும்அடுத்தவங்களுக்கு தெரியாதுல்லசரிதானே
                    மிதுன ராசிக்கார்களா ? நீங்கள்ஒங்க வீட்டுக்கு அடிக்கடி வருவதை விரும்ப மாட்டிங்க. அப்படி வந்தால் அவங்க கிட்ட சரியா பேசமாட்டீங்க..சரிதானே
      கடக ராசியா உங்களோடது… ”நண்பர்கள், உறவினர்கள் எல்லோரும்ஒங்க கிட்ட இருந்து எட்டியே இருப்பாங்கசரிதானே நான் சொல்றது
   சிம்ம ராசியா…! அய்யோ கேட்கவே வேண்டாம்..ஒங்க்கிட்ட வைச்சுக்கவே மாட்டோம்..போங்க சரிதானே
                       கன்னி ராசியாஒங்களோடதுஅப்படின்னா எப்படி பெண்கள்கிட்ட ஒரு அடி தள்ளி நின்னு பேசுவோமோ அப்படி… ” நான் சொல்றது நெசந்தானே.
                       தோல்வி இல்லாத ஆளா நீங்கஅப்ப துலாம் ராசிதான். கரெக்ட்தானே
                      விருச்சிக ராசி ஆசாமியாநீங்கஒங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கறதுன்னாகொஞ்சமா யோசிக்கணுமே..
                     இணக்கமா பேசினா இணங்கிட்டீங்களாஅப்ப தனுசு ராசிக்காரங்கதான். அவ்வளவு இணக்கமானவங்க. நீங்க எப்படி?
                  ஓங்க சங்காத்தமே வேண்டாங்கஅப்படின்னாநீங்க மகர ராசிக்காரங்கதான்.                                   
       நூறு பேரு மொத்தமா வந்த மொத்த தயாரா வந்தாலும்..சமாளிக்கும் திறமைசாலி யாருன்னாஅது கும்ப ராசிக்காரங்கங்கோ
                       எப்போதும், தோள்கொடுக்கும் தோழமையான ஆளாநீங்க. ஒங்களது மீன ராசிதானே.                       
                     ” ஏடாகூடாமா சொல்லி இருக்கிற ராசிக்காரங்க யாரும் சண்டைக்கு வந்திடாதீங்கஏன்னா இது நான் சொல்ல்ல. பழங்கால நூலான தனிப்பாடல் திரட்டில் இருந்து திரட்டினது-ன்னு முதல் பத்தியில சொல்லிட்டேன் . ஒத்தாசைக்கு யூடியூப் காணொளி இதோ!!!!


            


Related Posts Plugin for WordPress, Blogger... Related Posts Plugin for WordPress, Blogger...

10 கருத்துகள்:

  1. எனக்கு எந்த ராசி என்பதே தெரியாது நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தோல்வி இல்லாத நீங்க… துலாம் ராசிதான். கரெக்ட்தானே. கருத்துக்கு மிக்க நன்றி

      நீக்கு
    2. நண்பரே தங்களது கணிப்பு தவறு நான் வாழ்வு முழுவதும் தோல்வியை மட்டுமே சந்தித்தவன்
      வேண்டுமானால் இதற்கு எந்த ராசி என்று கூறுங்கள்.

      நீக்கு
    3. என்னிடம் இருக்கும் பழைய நூலில் தேடி உங்களுக்கு விடையளிக்கிறேன். நன்றி

      நீக்கு
    4. இதையெல்லாம் நம்பாமல் சில நாட்கள் முன்தான் ஒரு பதிவு போட்டேன் ,படிச்சீங்களா >>> ''நான் மிதுன ராசி இல்லைன்னு எப்படி கண்டு பிடிச்சே ?''\
      ''அந்த ராசிக்கு முதலில் ‘அன்பும், புத்தி சாதுர்யமும் கொண்ட’ ன்னு போட்டு இருக்குங்க !'

      நீக்கு
    5. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி, பழமொழி சொன்னா ரசிக்கணும், ஆராயக்கூடாது-ன்கிற கமல் வசனம் மாதிரி ஒரு புலவர் சொன்னதை சொன்னேன் அம்புட்டேதான்

      நீக்கு
  2. நானும் கடக ராசிக்காரர் தான்
    எங்க கிட்ட இருந்து
    எவரும் எட்டி இருக்கவில்லையே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எட்டி இல்லா விட்டால் நல்லதுதானே. இது பொதுவான கருத்துதான் நண்பரே. பதிவின் முதலிலேயே கூறி உள்ளேனே

      நீக்கு
  3. அடடா...நான் என்ன ராசின்னு தெரியாம போச்சே....!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்க ராசி எப்பவுமே நல்ல ராசிதான். ஆதான் வலைத்தளத்தில தைரியமா கலக்குறங்களே

      நீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...