இனிய கவிதை உலா

இனிய கவிதை உலா இனிதே வரவேற்கிறது கவிதைகள், சிறுகதைகள், பயனுள்ள தகவல்

திங்கள், 11 ஜூலை, 2016

தண்ணீர் கம்பெனி

காதில் விழுந்த
கானம் கேட்டு..
வேண்டுமென்றேன்!
வீணை!
வீணே….என்றாள்
வாணி!


தண்ணீர் கம்பெனி
தண்ணீர் கம்பெனி


தகதக்கும் தங்கம்
தேவையென்றேன்!
ஏறுமே….!
தலைக்கனமென
தவிர்த்தாள்
அலைமகள்!
வீரத்தின் பெருமை
வியந்து
உறை-வாளை
உடனே கொடு
என்றேன்
உனக்கா?
உதவாதென்றாள்!
மலைமகள்!
கங்கையின்
புனிதமறிந்தே
அருந்தவே வேண்டினேன்
கங்காதரனை!
அவர்தான்
மறுக்காமல்
அளித்தார்……விலாசம்.அது……?
தண்ணீர் கம்பெனி”!


Related Posts Plugin for WordPress, Blogger... Related Posts Plugin for WordPress, Blogger...

2 கருத்துகள்:

  1. வார்த்தைகளோடு உவமைகளும் அருமை நண்பரே வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி. மேலும் தமிழ்களஞ்சியம் வலைத்தளத்தில் பதிவினை இணைப்பதற்கு வழிகாட்டுங்கள் மிக்க நன்றி

      நீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...