வெள்ளி, 29 ஏப்ரல், 2016

சாபம் - சிறுகதை

மலைச்சரிவில் உள்ள  கிராமத்திற்கு மேடுபள்ளங்கள் நிறைந்த  சாலையில், காய்கறி மூட்டைகள் துணி மூட்டைகள் என ஏகப்பட்ட மூட்டைமுடிச்சுகளுடன் குலுங்கியும் சாய்ந்தும் போய் கொண்டு இருந்தது  பேருந்து.
ரு நிறுத்தத்தில் பேருந்து நின்றது. ஒரு வயதான பாட்டியும்>  கூடவே ஒரு   பருவவயது பெண் ஒருத்தியும் அது அவள் பேத்தி போல இருந்தாள். அவா;கள்   ஏறினார்கள். . ஏறியவுடன் கடைசி இருக்கைகளில் ஒன்று மட்டுமே அதிசயமாக காலியாக இருக்க

.
                                “ இந்தாம்மா இந்த சீட்ல ஒக்காந்துக்கோவலிய உட்கார சொன்னான் பக்கத்து சீட்டில் இருந்த வாலிபன்.  பாட்டி நின்று கொண்டு இருந்தாள்.
                                 என் பாட்டி ஒக்காரணும். நீங்க இடம் கொடுத்தாஎன்று கேட்ட பருவமங்கைக்குஒன் பாட்டியை முன்னாடி போய் ஒக்கார சொல்லு, நான் எழுந்திருக்க  மாட்டேன்என்று வாலிபன் சொல்ல…..
                                  பயணிகளில் பலர்என்னடா அநியாயமா இருக்கு, பேத்தியை ஒக்கார சொன்னவன் வயசான பாட்டிக்கு இடங்கொடுக்காம முன்னாடி போவ சொல்றானே பேத்தி இனிக்குது…. கிழவி கசக்கறாளோ” “”இவனுக்கெல்லாம் நல்ல கதியே கிடைக்காது,“ என சாபம் வேறு கொடுத்தனா;. கண்டக்டர் சொல்லியும் அவன் கேட்கவில்லை  .கடைசியில் பாட்டி டிரைவருக்கருகில் உள்ள சீட்டில் தடுமாறியபடியே போய் உட்காh;ந்தாள்.
                                .இதெல்லாம் பழகிப்போன ஒன்று  என டிரைவர்; பேருந்தை ஓட்டினார்;. நேரத்திற்கு அந்த கிராமத்தை அடையவேண்டும் என்று வேகத்தைக் கூட்ட ஒரு பெரிய பள்ளத்தில் பேருந்து ஏறிஇறங்கியது.  கடைசி இருக்கைகளில் உட்காh;ந்திருந்த அத்தனை பயணிகளும் நிலைதடுமாறி பேருந்துக்குள்ளேயே கீழே விழுந்தனா;. அதில் அந்த பருவப்பெண்ணும் அடக்கம். ஏல்லோருக்கும் சிறு சிராய்ப்பு ஏற்பட்டு கைகளை பதம்பாh;த்தன.
                                “இதுக்குத்தான், அந்த பாட்டிக்கு இடம் கொடுக்காம முன்னாடி போவ சொன்னேன்என்றான் வாலிபன்.
                                வயதான பாட்டிக்கு எழுந்து சீட்கொடுக்காத பயணிகள் எல்லோரும்   சேர்ந்து ஒனக்கு நல்லகதி கிடைக்கும்பாஎன வாழ்த்தினார்கள்.       
            அதைக் கேட்டு  வாலிபன் விழுந்து விழுந்து சிரித்தான்.

                                சாபம்-சிறுகதை

8 கருத்துகள்:

 1. ஹா ஹா ஹா சிரிக்கவும் சிந்திக்கவும்
  அருமையான சிறுகதை ...
  வாழ்த்துகள் நண்பரே...

  பதிலளிநீக்கு
 2. எழும்பில்லாத நாக்கு எப்படியும் பேசும் அருமை நண்பரே...

  பதிலளிநீக்கு
 3. சாபம் பலித்தால் யாருமே இருக்கமாட்டார்கள்...நல்லவேளை....

  பதிலளிநீக்கு
 4. பேத்தியின் மேல் சிராய்ப்பு ஏற்படாத காரணம் ,நம்மாளு தாங்கிப் பிடித்துக் கொண்டதுதான் என்றும் கேள்விபட்டேனே :)

  பதிலளிநீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...