வெள்ளி, 8 ஏப்ரல், 2016

தேன் கிடைத்திடுமோ !

தேன் கிடைத்திடுமோ?
     தேனீ கொட்டுமேயென்று
      துவண்டு விடின்
       தேன் கிடைத்திடுமோ ?
       ஏணியை எட்டிஉதைத்திடின்
        ஏறுவது உச்சிக்கு    எங்ஙனமே!


                                அலைகளுக்கு அஞ்சிடின்
                                அலைகடலில் நீந்திடுவோமா?
                                கிளைகள் எதற்கென வெட்டிடின்
                                கிடைத்திடுமோ அருங்கனிகள்                                                              
  
    தொல்லைகளை நினைத்திடின்
                                தூக்கம் வந்திடுமோ?
                                எல்லைகளை வகுக்காதே
                                முடிவில்லா பயனமாகட்டுமே!6 கருத்துகள்:

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...