இனிய கவிதை உலா

இனிய கவிதை உலா இனிதே வரவேற்கிறது கவிதைகள், சிறுகதைகள், பயனுள்ள தகவல்

திங்கள், 4 ஏப்ரல், 2016

நிரந்தர விடுதலை !

ஒரு நிமிட
தாமதத்துக்கு….
ஒற்றை ரோசா!

பத்து நிமிட
தாமதம்
பச்செனபளிச்
முத்தம்!பிறந்த நாளிலும்
தாமதம்
வளைக்கரங்களால்
ஒரு வலைச்சிறை!

திரைப்படத்திற்கு
தாமதம்
ஐஸ்கிரிம்….
பாப்கார்ன்….
இரண்டிரண்டாய்

இரண்டிரண்டு
ஐஸ்கிரிம்களும்..
பாப்கார்ன்களும்
படம் பார்க்க
காதலிக்கு உதவிட..

ஐஸ்கிரிம்கள்
சுவைக்கும் அழகை..
நான் சுவைக்க..
படத்தினை தொடர
தாமதம்!

அபராதங்கள்
கொடுத்தே
ஆராதித்த
காதலியோ
அளித்தாள்
அபராதத்திலிருந்து
விடுதலை!
அது…..
கல்யாணம்!


--- கே. அசோகன்.                              Related Posts Plugin for WordPress, Blogger... Related Posts Plugin for WordPress, Blogger...

3 கருத்துகள்:

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...