சனி, 30 ஏப்ரல், 2016

கண்ணன் நல்லவனா ?

எல்லோரும் தலைமேல் தூக்கிவைத்துக்  கொண்டாடுகிறார்கள், இனிய கண்ணனை. ஆனால், அவன் செய்த காரியம் என்ன? நெஞ்சம் பதைபதைக்கிறது. கண்ணன் நல்லவனா?  என்பதுதான் தலையாய கேள்வி.


                சராசரி மனிதர்கள்கூட, ஒருவரின் உயிர் பிரியும் போது, ”அச்ச்ச்சோ, என பரிதாபப்பட்டு தண்ணீரை குடிக்க வைத்து செய்து, சாந்தி செய்வார்கள்ஆனால், கண்ணன் என்ன செய்தான், தண்ணீரா? கொடுத்தான்.
                மகாபாரத போர்க்களத்தில், வில்லம்புகள் உடம்பெல்லாம் துளைத்து, வலியால் கர்ணன் துடிதுடித்து, உயிர் ஊசலாடுகையில், ”ஏதாவது தானம் கொடேன்என்று     மாயவித்தையில் வல்லவனான மாயவன் மாறுவேடத்தில் வந்து கேட்கிறான்.          
     ”என்னிடம் ,ஏதும் இல்லையே கொடுப்பதற்கு”, என்று வருந்துகிறான் கர்ணன்.
                கொடுப்பதற்கு ஒன்றுமில்லையா?, ”இதுநாள் வரை செய்துவந்த தானதர்மங்களின் புண்ணியபலன்கள் இருக்கும் அல்லவா? அதைக் கொடுத்துவிடுஎன்கிறான் கண்ணன்.
                 இறக்கும்போதும், தானம் செய்யும் பாக்கியம் கிடைத்ததே என சந்தோஷத்தோடு, அதை அப்படியே தாரை வார்த்தான் கர்ணன். அந்த கடைசி நேரத்திலும், ”தானம் கொடுஎன்று  தாட்சன்யமின்றி கேட்ட கண்ணன் செய்தது நியாமா?
                 வில்லம்புகள் துளைத்ததால் ஏற்பட்ட, வேதனை ஒருபுறம்,. தானதர்மங்களின் புண்ணியங்கள், கர்ணனின் கண்முன்னே நிழலாடிஉயிர் பிரிவதை மேலும் தாமதப்படுத்தி அவதிக்குள்ளாக்கியது.
                ”கர்ணன், உயிர்பிரியாமல் வேதனைப்படுவதை அறிந்துதான், , ”தானதர்மங்களின் புண்ணியத்தைதாரைவார்க்க கேட்டு வாங்கி கொண்டுகர்ணனின் ஆன்மா அமைதியுறவழிவகை செய்தான்.
                இப்போது சொல்லுங்கள், கண்ணன் நல்லவன்தானே!

                 8 கருத்துகள்:

 1. கண்ணன் நல்லவனா கர்ணன் நல்லவனா
  உள்ளத்தில் இருவருமே நல்லவர்கள்தான்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கர்ணனை புரிந்து கொள்ளலாம், கண்ணனை புரிந்து கொள்வது, பெண்களை புரிந்து கொள்வதற்கு ஒப்பாகும். மிக்க நன்றி

   நீக்கு
 2. இப்போது மட்டும் இல்லை எப்போதுமே கண்ணன் நல்லவன் இல்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒவ்வொருவர் பார்வை ஒருவிதம், அதில் உங்களுடையது கருத்துக்கு நன்றி

   நீக்கு
 3. பரம்பொருளானவன் அனைத்தும் அறிவான். கண்ணன் நல்லவனே. இல்லையேல் இத்தனை ேர் உள்ளங்களை கொள்ளை கொள்வானா?

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் நண்பரே முதலில் இது கதையா ? அல்லது நடந்த சம்பவமா ? என்பதில் எனக்கு குழப்பம் உண்டு நடந்த சம்பவம் என்றால் இப்போது கண்ணன் எங்கே ? இன்றைய அரசியல்வாதிகள் செய்யும் அட்டூழியத்தை தடுக்க கூடாதா ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்னும் நூறு ஆண்டுகளில் மகாத்மா காந்தி என்ன ஆவார். அதுபோலத்தான் இதுவும். தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி

   நீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...