இனிய கவிதை உலா

இனிய கவிதை உலா இனிதே வரவேற்கிறது கவிதைகள், சிறுகதைகள், பயனுள்ள தகவல்

வெள்ளி, 29 ஏப்ரல், 2016

முடிவும் முடிவாகும்

முடிவானது முன்பே
இராமன்
காடேக வேண்டுமென்று….
நிறைவேறியது
கைகேயியின் வரங்களாலே!

முடிவானது
முன்பே!
சீதை
இராமனுக்கென்று
முறிந்த்து
சிவதனுசு(வில்)

முடிவானது
முன்பே!
சீதை
கடத்தப்பட வேண்டுமென….
நிறைவேற உதவினான்
இராவணன்!

முடிவானது
முன்பே!
மீண்டும் மகுடம் சூட
முடிவும் முடிவாக
முடிசூட்டினர்
இராமனுக்கு!

நன்றி- இலக்கியபீடம்
சூலை 2006
4 கருத்துகள்:

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...