வியாழன், 28 ஏப்ரல், 2016

நானா இல்லை !


இனிய கவிதை உலா
ஏதோ…… ஏதோ…
கிறுக்கியதை
கவிதை என்றார்கள்!

கவிதை ஆனதால்…
என்னையும்………
கவிஞன் என்றார்கள்!பல கவிதைகள்
புனைந்ததாலே
கவி வேந்தன்
என்றார்கள்

கவி வேந்தன்
என்றவுடனே….
வேந்தனுக்கே உரிய
கர்வமும் கூடவே
கௌவிக் கொண்டது

கர்வத்துடனே…
தாறுமாறாய்
பற்பல கவிதைகள்
புனைந்ததால்..
கூடிப் போனது
எண்ணிக்கையில்..!

எண்ணிக்கையில்
கூடிப்போன
கவிதைகளில்…
காணாமற் போன
உயிரோட்டத்தை…
உயிரரூட்டினான்!!
ஒருவன்!

அவன்…..
கவிஞனமில்லை!
புலவனுமில்லை!
கம்பனுக்கே…
எடுத்து கொடுத்தவன்
போலவே எனக்கும்
ஒருவன்
இதில் யார் படைப்பாளி
நானா? இல்லை அவனா?

----- கே. அசோகன்.

kavithaigal0510.blogspot.com protected image


www.pathivar.net
http://thenkoodu.in

8 கருத்துகள்:

 1. இதில் யார் படைப்பாளி
  நானா? இல்லை அவனா?---,இருவருமே படைப்பாளிதான்.

  பதிலளிநீக்கு
 2. அருமை. நானாக நானில்லை. கவிஞனாக ஆகி விட்டேன் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மி்க்க நன்றி

   நீக்கு
 3. நன்றாக அலசி உள்ளீர்கள்

  தங்கள் பதிவுகளை இணைத்து மின்நூல் ஆக்க உதவுங்கள்
  http://tebooks.friendhood.net/t1-topic

  பதிலளிநீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...