வெள்ளி, 22 ஏப்ரல், 2016

சிரிக்கவா போறீங்க ?

இனிய கவிதை உலா
வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்ன்னு” முன்னோர்கள் சொல்லி வைச்சாங்கன்னு”   நீங்க சிரிச்சிங்கன்னா…வீட்டுல இருக்கிற பாட்டிம்மா, அடியே, பொம்மளை சிரிச்சா போச்சு”ன்னு ஏகத்துக்கு கத்தும், சே, பாவம் அந்த காலத்து ஆளாச்சே”, சரி விட்டுடுவோம்.
               அந்த பாட்டி சொல்றதுல அர்த்தம் இருக்கத்தான் செய்யுது, அது என்னான்னா… ஒரு பிரம்மாண்டமான கண்ணாடி மாளிகையை அந்த ராஜா சுற்றி பார்த்துக்கொண்டே வந்தார், , அந்த இடத்தின் அடையாளத்தை புரிந்து கொள்ளாமல், இடறி விழுந்துவிட்டார்..
             
இடறி விழுந்த்தைப்  பார்த்த  பருவமங்கை, ”கெக்கே.கெக்கே”ன்னு அடக்க முடியாமல் சிரித்து விடுகிறார். அந்த ராஜாவுக்கு பெருத்த அவமானம். நெஞ்சுக்குள்  வஞ்சக நஞ்சை அப்போதே புகுத்தி கொள்கிறார்.
              சிரித்தவள் ”மகாபாரதத்து பாஞ்சாலி”
              நெஞ்சுக்குள் வஞ்சக நஞ்சைப்  புகுத்திக் கொண்டவர்,  கௌரவர் துரியோதனன்” , மகாபாரத போருக்கான சங்கநாதம் அப்போதே ஒலிக்க ஆரம்பித்து விட்டது.
               இப்படி சிரித்து மாட்டிக் கொள்வதைவிட, எப்படியெல்லாம் சிரிச்சா நல்லதுன்னேதான் பார்ப்போமே”
               சிலர் சிரிப்பார், அது சாதாரணமாக இருக்கும். இவரால் எவருக்கும் பாதிப்பில்லை
              பொது இடமாச்சே, அப்படின்னு, சிலர் சிரிப்பதை அடக்கமாக்கி கொள்வார்கள். இவர்களாலும் பிரச்சினையில்லை.
               மென்னகைப்பார்கள் சிலர். இது, பெரும்பாலும், பதின்மவயதுள்ள பருவமங்கைகளிடம் பூக்கும். இந்த மென்னகையை முகத்தில் படரவிட்டுதானே, காதலனை வீழ்த்தி விடுகிறார்கள்.
               பேருந்தில் ஏறும்போது தவறி விழுந்துவிட்டீர்கள், அப்போது, அங்கே விழுந்தவர்களுக்கு உதவி செய்யாமல். அற்பமாக சிலர் சிரிப்பார்கள்.. இந்த ரகம்தான் பாஞ்சாலி  சிரிப்பு
               டி.வி. வால்யுமைவிட , பக்கத்து வீடு, எதிர்த்த வீடு எல்லாம் கேக்குற மாதிரி சத்தம் போட்டு சிரிக்கிற ரகமாகவும் சிலர் இருப்பார்கள். இவர்களது உரத்த சிரிப்பு.       இதனால்,  பக்கத்து வீட்டுக்காரர் பகையாளிகூட ஆகலாம், எதிர்த்த வீட்டுக்காரர், இணக்கமாகவும் ஆகலாம். அந்த நேரத்தைப் பொறுத்தது
               எனக்கு அவசரமா ஒரு ஆயிரம் ரூபாய் வேணும், அப்போ, அபிஸ் பிரண்ட்கிட்டே, “முப்பத்திரண்டு பல்லையும் காட்டி, ஈஈ-ன்னு இளிச்சிகேட்டே” கடன் கேட்டா, அதுக்கு பேர் பல்லிளிப்பு சிரிப்புதாங்கோ.
                ”டி.வி பொட்டில, ”சார்லி சாப்பிளின் டணால் தங்கவேலு, நாகேஷ், சந்திரபாபு படத்தை பார்த்துகிட்டே, சிரிச்சா…அப்போ குலுங்கும் பாருங்கோ வயிறு, அதுக்கு  பேர்தான் வயிறு குலுங்க சிரிப்பு.
                ”அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் ஆணவ சிரிப்பு, சிரிப்பவர் யார்” அழுபவர் யார் தெரியும் அப்போது, வயிறு குலுங்க சிரிப்பவர்கள் மனித ஜாதி, பிறர் வயிறெரிய சிரிப்பவர்கள்…..? ”.இன்னா சிரிப்பு சிரிக்க போறீங்க நீங்க?

                                                              ---கே. அசோகன்.

10 கருத்துகள்:

 1. அருமையான பதிவு, ஆயினும் அதற்காக பாஞ்சாலியை துரியோதனன் துகிலுரிந்தது அதிகப்படி தான். மற்றவர் மனதை காயப்படுத்தாமல் சிரிப்பு நல்லதே. நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு மிக்க நன்றி, கருத்தினை வழங்கினால் குறைகளை போக்கி கொள்கிறேன்.

   நீக்கு
 2. சிந்தித்தால் சிரிப்பு வரும்..மனம் நொந்தால் அழுகை வரும் இந்தப்பாடல்தான் நினைவுக்கு வருகிறது..

  பதிலளிநீக்கு
 3. சிரித்தால் அழுகை வர வேண்டும்
  அப்படிதான் சிரிக்கோணும்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சந்தோஷ சிரிப்பில் கண்களில் நீர் துளிர்க்கும். அப்படித்தானே

   நீக்கு
  2. சிரித்தாலும் கண்ணீர் வரும் ,அழுதாலும் கண்ணீர் வரும் !உங்களுக்கு எந்த கண்ணீர் பெட்டர் :)

   நீக்கு
  3. அழும்போது வரும் கண்ணீர் சோக கண்ணீர், சிரிக்கும் போது வரும் கண்ணீர் ஆனந்த கண்ணீர் தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி

   நீக்கு
 4. வாய் விட்டுச் சிரித்தால்
  நோய் விட்டுப் போகுமாம்
  பெரியவங்க சொல்றாங்கோ...

  உங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்!
  http://www.ypvnpubs.com/2016/04/blog-post_18.html

  பதிலளிநீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...