சனி, 19 மார்ச், 2016

நல்லா சிரிக்கணும்ன்னா !

காலைல எழுந்தவுடனே கண்ணாடியில உங்க பற்களைப் பார்க்கறீங்க, உங்களுக்கே பார்க்க தோணல, அப்புறம் மத்தவங்க எப்படி பார்ப்பாங்க ? ஆதனால…. பல் தேய்க்க டூத் பிரஷ், பேஸ்ட்டாஇருங்க. அதை விட்டுட்டு
           கருவேலங்குச்சியில பல் தேய்ச்சீங்கன்னா…  ஒங்க பல்லால கருங்கல்லையே மெல்லாம், அவ்வளுவு ஸ்டிராங்காயிடும்
           வேப்பங்குச்சியில தேய்ச்சீங்கன்னா…  பற்கள் பளீச்சென்று இருக்கும்.
           பூலாங்குச்சியில பல் தேய்ச்சா…. வீரிய விருத்தி, அதாங்க குழுந்தைப்பேறுக்கான தெம்பு கிடைக்கும்.
            வாழ்க்கையை ஓட்ட பணம் வேண்டுமே, அதுக்கு ஆலம் விழுதால பல் தேய்ச்சீங்கன்னா, லட்சுமி கடாட்சம் தன்னால வந்துடும்.
            போகிறவர்கள் எல்லாம் ஒங்களை பார்த்து, திரும்பவும் ஒங்களை திரும்பி பார்க்கணும்-ன்னா, நாயுருவி வேரால பல் தேய்ங்கமுகம் வசீகரமாக்கும்.
           இதெல்லாம் நாட்டுமருந்து கடைகள்ல தாராளமா கிடைக்குதுங்கோ                     
 -        
                                                               --- கே. அசோகன்.


2 கருத்துகள்:

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...