சனி, 12 மார்ச், 2016

நான் யார் ?

நான் யார்?”
                                                           
நான் யாரென்றே?
கேட்டேன்

தாயும்தந்தையும்
மகன்  என்றார்கள்

மனைவியோ..
எனக்கே எனக்கான
மணாளன் என்றாள்

மகனோ….
பாக்கெட் மணிக்கான
ஏடிஎம் என்றான்

பேரன்பேத்தியோ
தாத்தா என
தாவி வந்தார்கள்.

உறவுகள்
ஆளுக்கொரு
உறவினை சொல்ல…..

ஆத்திகன்
பக்தனாக்கினான்

நாத்திகன்
பகுத்தறிவு பட்டறையில்
சேர்த்துக் கொண்டான்

குழப்பமோகுழப்பம்
எனக்கு….

கடைசியில்….
நானே
நான் யார்?என்ற
கேள்வியில்
கரைந்தவுடனே
நான் யார்?”
என்பதில்
நானைஅறுத்து விடு
நான் யார்? நீ யார்?
தெரிந்து விடும்
என்றது
அந்தநான் யார்”?

                      ----கே. அசோகன்.

      


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...