
பறந்து போனவர் விஜய மல்லையா, ”தொழிலில் நஷ்டம் ஏற்படுவது சகஜம்தான். ஆனால் அதற்கு பறந்தா போவார்கள். ஆம். விமான சர்வீஸ் நடத்தியவர் நடந்தா போவார் பறந்துதான் போவார்.
இப்படி கடன் வாங்கி விட்டு தப்பிப்பவர்கள் பற்றி அந்த காலத்திலேயே நம் முன்னோர்கள் தனிப்பாடலாக எழுதி வைத்து விட்டு சென்றுள்ளார்கள். அது இப்போது நினைவுக்கு வரவழைத்து விட்டார் விஜயமல்லையா!
வில் வளைவது போல, உடம்பை வளைத்து கடன் கேட்பது
வாங்கிய கடனைத் திருப்பி தந்துவிடுவதாக உறுதியளிப்பது
இவற்றை நம்பி கடன் கொடுத்தார்கள் வங்கி அதிகாரிகள். அல்லது நீங்கள் கடன் அடுத்தவருக்கு கொடுத்து விட்டீர்கள்!
இப்போது, கடன் வாங்கியவர் என்ன செய்வார்?
வில்லங்கம் பேசுவார், கடனே பெறவில்லை என்றும் கூறுவார், நம்மை நடக்க வைப்பார், அழுத்தமாய் கேட்டால், மிரட்டவும் செய்வார்.
இப்படியெல்லாம் நடைமுறையில் நடக்கிறதுதானே!
”வில்லாய் வளைந்து நிசங்காட்டி வாங்குவர் மீளவந்தே
அல்லும்பகலுங் கடன் கொடுத்தோர் அலைந்திடினும்
வில்லங்கம் பேசுவர் இல்லையென்று ஓதுவர் வாளுருவி
கொல்லவும் பார்ப்பர் கலிகாலத்தே கடன் கொள்வோரே!
.
இந்த தனிப்பாடல் இப்போதைக்கு பொருந்துவதற்கு, தனிப்பாடல்தான் சாட்சியாக உள்ளன.
------கே. அசோகன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்