இனிய கவிதை உலா

இனிய கவிதை உலா இனிதே வரவேற்கிறது கவிதைகள், சிறுகதைகள், பயனுள்ள தகவல்

சனி, 12 மார்ச், 2016

அகிலத்து நாயகியே !

அகிலத்து நாயகியே

கல்லும் கனிய கவிபாடி நான் அழைக்க
கண்முன் தோன்றாயோ சிவசக்தி
உள்ளும் புறமும் உன்னை வைத்து
ஓயா(து) நினைப்பேன் ஓடிவா ஓங்காரி

அன்பே! ஆனந்தமே!அருள்சுரக்கும் கற்பகமே!
பண்பே! பைந்தமிழேபவளவாய் சிரிப்பழகே!‘
விண்ணேவிண்வியக்கும் வெற்றி திருமகளே!
கண்ணே! கருமணியே! கருணை வடிவானவளே!



நித்திலமே! நேரிழையே! நின்கமல பாதமலரே!
புத்தொளியே! புதுப்புனலே! பூவினும் மெல்லியளே!
கத்தும் கடலலையே! கடலலையின் நாதஒலியே!
வித்தே! வித்தைக்(கு) உரியவளே! வீணை உடையவளே!

என்னவளே! எழிற்கூந்தல் உள்ளவளே! உன்றன்
சின்னஇதழ் சிந்தும் சிங்கார மோகனமே!
உன்னுள்ளே எனைப்போட்டு என்னுள்ளே நீயிருக்க
கண்மூடிக் கிடக்கையியேல காலங்கள் கரையுதம்மா!

அமுதீசம் இடப்பாகம் அமர்ந்தவளே! ஆரமுதே!
அன்னத்தின் உள்ளிருக்கும் அன்னபூரணி தாயே!
அமுதினும் இனிதன்றோ அருள்சுரக்கும் ஞானப்பால்
அன்றாடம் ஊட்டிடுவாய் அகிலத்(து) நாயகியே!


n  கே. அசோகன்.




Related Posts Plugin for WordPress, Blogger... Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...