இனிய கவிதை உலா

இனிய கவிதை உலா இனிதே வரவேற்கிறது கவிதைகள், சிறுகதைகள், பயனுள்ள தகவல்

வியாழன், 31 மார்ச், 2016

அவர் பறந்து போனாரே !

அவர் பறந்து போனாரே! நம்மை மறந்து போனாரே!- என்று நம் தேசம் முழுவதும் வங்கி அதிகாரிகளும், பொது மக்களும் சோக கீதம் பாடிக் கொண்டிருக்கின்றனர்.Related Posts Plugin for WordPress, Blogger... Related Posts Plugin for WordPress, Blogger...

கீதம் சங்கீதம் !

கீதம்….சங்கீதம் !
                                         “,,,,,,,,,,,,,,,,,என்ன இவர் ஒன்றாம் வகுப்பு பிள்ளைகளுக்கு பாடம் நடத்துகிறாரோ ? என்று எண்ண வேண்டாம்.
             இந்த எழுத்துகளுக்கும், ராகங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
             பதினெட்டு எழுத்துகளும், பதினெட்டு ராகங்களைக் குறிப்பிடுகிறது.
           ()- அசுரவேரி   ()- கல்யாணி ()   -காம்போதி, ()-சங்கராபரணம், ()- சரவேரி, ()-முகாரி, ()- கேதார கௌனம், ()- நவரோக, ()- பந்துவராளி, ()- மத்திமாவதி ()- மோகனம், ()-சராங்கம், () –எதுகுலகாம்போதி, ()- பைரவி ()- ஆனந்த பைரவி ()- பியரகடை ()- அடாணா
        தமிழ் மொழிக்கும் இசைக்கும் நெருங்கிய தொடர்பை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் ஏற்படுத்தி விட்டனர். ராகங்களும் பதினெட்டு, சித்தர்களும் பதினெட்டு- அதை நினைவு படுத்தவே இப்பகிர்வு

                                                                                                                 --- கே. அசோகன்.


Related Posts Plugin for WordPress, Blogger... Related Posts Plugin for WordPress, Blogger...

புதன், 30 மார்ச், 2016

மனைவியை ஜெயிக்கணுமா ?

பெரிய ஞானிகளும், சித்தர்களும் ”எல்லாம் மாயை” என்பார்கள். ஒவ்வொரு செயலும் மாயையின் விளையாட்டு என்பார்கள்.
            மாயையை ஜெயிப்பது அவ்வளவு சுலபமல்ல, என்றும் சொல்வார்கள்.
மனைவியை ஜெயிக்கணுமா ?            அதே போல, எல்லாம் மனைவிதான் என்பார்கள். இல்லறவாசிகள் . ஒவ்வொரு செயலிலும் மனைவி இருக்கிறாள் என்றும், மனைவியை வெல்வது அவ்வளுவு சுலபமல்ல, இன்னும் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறாளே! என்றும் புலம்புவார்கள்.
            ஆக, மாயையையும், மனைவியும் ஒன்று போல தோன்றுகிறதா? ஆம், அப்படித்தான் தோன்ற வேண்டும். அதுதான் இயல்பு
            மாயையிடம் போட்டி போட்டு வெல்ல முடியாது.
Related Posts Plugin for WordPress, Blogger... Related Posts Plugin for WordPress, Blogger...

திங்கள், 28 மார்ச், 2016

கருப்புதான் பிடிச்ச கலரு!

 பரந்தாமன் பச்சோந்தியா? என்று கேட்கும் அளவுக்கு  நாம் வணங்கும் பரந்தாமன் கூடவா அவ்வப்போது தன் நிறத்தை மாற்றிக் கொள்கிறார் என்ன கொடுமை ஸார் இது? என்று கேட்க தோன்றுகின்றது அல்லவா?
           , பாற்கடலில் அனந்தசயனம் கொண்டிருக்கும் பரந்தாமன், படைப்பு தொழில் புரியும் பிரம்மாவுக்கும், அவரது மனைவியான சரஸ்தேவியின் கண்களையும் மறைத்து இப்படியெல்லாமா தம்மை மாற்றிக் கொள்வார்!
           வெண்மை நிறமாக, கிருதயுகத்தில் காட்சியளித்தாராம்
           பொன் நிறமாக திரேதாயுகத்தில் காட்சியளித்து அருள்புரிந்தாராம்
           பச்சை நிறத்தில்பச்சை மாமலை போல் மேனிஎன்று ஆழ்வார் பாடியது போலவே தம்மை மாற்றிக் கொண்டாராம்.
           இப்பொழுது நாம் வாழும் கலிகாலத்தில் கருப்புதான் எனக்கு பிடிச்ச கலருஎன்பது போல, பரந்தாமன் கருப்பு.நிறத்தில் காட்சியளிக்கிறாராம். இதையெல்லாம் நான் சொல்லவில்லை.
                       
                     ”    நிறம்வெளிது செய்து பசிது கரிதென்று
                        இறைஉருவம் யாம் அறியோம் எண்ணில் நிறைவுடைய
                        நாமங்கை தானும் நலம்புகழ் வல்லனே
                        பூமங்கை கேள்வன் பொலிவு
இப்படி பாடலாக பரந்தாமனுக்கு புகழாரம் சுட்டியவர் பேயாழ்வார். இந்த பாடலை மூன்றாம் திருவந்ததாதியாக பாடப் பெற்றுள்ளர்..


திவ்ய பிரபந்தம் நூலில் இருந்து          -- கே. அசோகன்.
கருப்புதான் பிடிச்ச கலரு


Related Posts Plugin for WordPress, Blogger... Related Posts Plugin for WordPress, Blogger...

ஞாயிறு, 27 மார்ச், 2016

குடையின் ஆதங்கம் !

இனிய கவிதை உலாவெயிலில் !
கறுக்காமலிருக்க
என் நிழலில் நீங்கள்

மழையில்
நனையாமலிருக்க
எனக்குள் நீங்கள் !
Related Posts Plugin for WordPress, Blogger... Related Posts Plugin for WordPress, Blogger...

சனி, 26 மார்ச், 2016

வெல்வதும் வீழ்வதும்

விதையொன்று விழுந்தால்
விருட்சமாகும்!
வீணாய் இருந்தால்
வீணாய் போகும்!

எறும்பாய் இருந்தால்
சுறுசுறுப்பாகும்!
சோம்பலாய் இருந்தால்
சுகமா வரும்!

கருவொன்று பிறந்தால்
கதைகளாகும்!
கருத்தொன்று எழுந்தால்
கவிதைகளுமாகும்

சுனையொன்று கொட்டினால்
அருவியாகும்!
வினையொன்று ஆற்றினால்
வினைகளாகும்!

வினாஒன்று எழுப்பினால்
விடையொன்று ஆகும்
கனாஒன்று கண்டால்
களிப்புமிக ஆகும்!

மலரொன்று மலர்ந்தால்
மணமாக வீசும்!
நிலவொன்று ஒளிர்ந்தால்
நித்திரை சுகமாகும்!

சொல்லொன்று உதிர்த்தால்
வார்த்தையாகும்!
சுள்ளென்று விழுந்தால்
எரிச்சலாகும்.

சொல்லொன்றா ,சுள்ளெனறா ?
சொல்லிடுக தோழா
வெல்வதும் வீழ்வதும்
அதனின் படியே!


---- கே. அசோகன்.


Related Posts Plugin for WordPress, Blogger... Related Posts Plugin for WordPress, Blogger...

வெள்ளி, 25 மார்ச், 2016

பனித்துளிக்குள் ஒரு பாற்கடல் - நூல் நயம்

சென்னைக்கு சென்று ஊர் திரும்புவதற்குள், அந்த  புத்தக நிறுவனமான உறிக்கிம் பாதம்ஸை எட்டி பார்க்காமல் வருவதில்லை என்று தீர்மானம் எனக்குள் எப்பொழுதும் இருக்கும்.   அப்படித்தான், அண்ணாசாலையில் உள்ள உறிக்கிம் பாதம்ஸில் இரண்டு மணி நேரம் அலசியதில்,  ஒரு புத்தகம் மட்டும்  வாங்குவாங்கு என்று தூண்டியதில் வாங்கி விட்டேன்.  அந்த புத்தகத்தை எடுத்துக் கொண்டு இரயிலில் ஏறியவுடன் பிரித்துப் படிக்க ஆரம்பித்தேன்.             
 பக்கத்தில் பயணம் செய்த இளைஞர், புத்தக தலைப்பைக் காட்ட சொன்னார்;, காட்டியவுடனே, “பிளிஸ் கொஞ்சம் கொடுங்கள்  சிறிது நேரம் படித்து விட்டு தருகிறேன் என்று வாங்கினார் சிறிது நேரத்தில், புத்தகத்தை திருப்பி தர மனதில்லாமலேயே திருப்பி தந்தார்
                       
     மீண்டும்  படிக்க துவங்க, எதிரே உள்ள  ஒரு இளம் கல்லூரி மாணவி, ஸார், பிளிஸ், அந்த புக் தருவீங்களா? படிச்சுட்டு தருகிறேனே! என்று கேட்டார். அவரிடம் கொடுத்து விட்டு சற்று கண்ணயர்ந்தேன். இப்படியாக நான் வாங்கிய அந்த புத்தகம், இரயிலில் ஒரு பத்து பேரிடமாவது பவனி வந்திருக்கும்.
                                இறங்கி வீட்டுக்கு சென்றதும், அந்த புத்தகத்தில் என்னதான் புத்தக ஆசிரியர் விவரித்துள்ளார் என்று ஆராய்ந்து லயிக்க துவங்கிஅதில் குறிப்புகளை எடுக்க ஆரம்பித்ததில், அவைகளே நூல்நயமாக மாறிவிட்டது. அதனையே இங்கே பகிர்கிறேன்.
இருபத்தோறாவது நூற்றாண்டு பிறப்பதற்கு இன்னும் முப்பத்தைந்து மாதங்கள் எஞ்சியுள்ளன, நம்மில் சிலர் கல்கி அவதாரம் எப்போது அவதரித்து நம்மைக்காக்கும் என எண்ணிக் கொண்டுள்ளோம்
                                                இப்படி ஆரம்பிக்கிறது நூலின் முதல் அத்தியாத்தில்….
                                               
                                                அடுத்து….அடுத்து நம்மை திகைப்பிலும், வியப்பிலும் ஆழ்த்துகிறது;
                                                எப்படி என்று பார்ப்போமா?
                                                அடுத்த 500 ஆண்டுகளில் மனித குலத்தினுடைய செல்வம் பல்கிப்பெருகும், அது குபேரனின் நிதிக்குவியல் போல பன்மடங்கு மேம்படும்.
                                     மனிதர்கள் இறந்த பின்னர் அவா;கிள்ன ஆளுமை (Personality) அடங்கிய உருவங்கள் சி.டியில் பதிக்கப்பெற்று ஏசு கிருஸ்து உயிர்த்தெழுந்தது போல உயிர்ப்பிக்க ஏதுவான காலம் வரும்
                               
                                                பூமியினை ஆட்சி செய்ததுப் போய். விண்வெளியை மனிதன் தன்வசப்படுத்தி பூமியின் காலனியாக்கி ஆதிக்கம் செய்வான்..  காதலர்களும் தேனிலவு தம்பதியரும் நிலவிலே தேன்நிலவுகொண்டாட பயண முகவர்கள் தோன்றுவர்.
                                                திர்;காலத்தில் இரண்டே வகைத் தொழிலாளார்கள் வாழுவார்கள் முதல் வகையினர், இயந்திரங்களுக்கு கட்டளையிட்டு தங்களது ஊதியத்தைப் பெறுவார் இரண்டாம் வகையினர் விண்வெளியில் கனிமப் பொருள்கள் தேடி (இங்க சுரண்டுனது போதாதுங்களா) தேடி உலா வருவார்கள்.
                                                2500 ஆண்டுகளாக உருமாறாமல் அதே வடிவில் இருக்கின்ற ஒரு உயிரினம் எது தெரியுமாங்க. அதாங்க சிலந்திப்பூச்சி-தான்
                                         சர்க்கரையை தெரியாதவங்க யாரும் இருக்க முடியாது. அதுதான் உலக மனிதர்களின் சுவை உணர்வை ஒருங்கே இணைத்து ஒருமைப்படுத்தியதில் முதலிடங்கோ….
 சமையலுக்கும், மையலுக்கு ஒரு எழுத்துத்தான் சேதம்…. இரண்டுக்கும் உள்ள அந்நியோன்யம் என்னவென்றால் காதலை நன்கு குழைத்து சமைக்கும் பாங்குதான இன்பம்என்று காங்கோவைச் சாh;ந்த சோனிஎன்ற கவிஞரின் கூற்றாம்.
                பசு  ஒரு நாளில் இருபத்து நான்கு மணிநேரமும், “வாழும்பொழுது   மூன்றில் ஒரு பங்கை உணவு உண்பதிலும் செலவிடுகிறது..
                சுற்றுலாப் பயணிகள் என்றால் ஊர் சுற்றுபவா;கள் என்றுதானே அh;த்தம், ஆனால் அதிலும் ஆறுவகை இருக்கின்றனராம்
                1) பயணம் மேற்கொள்வதில் உண்டாகும் மகிழ்ச்சியை அனுபவிக்க
     2) வழிகாட்டும் புத்தகங்கள் கையில் வைத்துக் கொண்டு சுற்றுலா செல்பவர்கள் (இவங்ககிட்ட ஓட்டல்காரங்க ஏமாத்த முடியாதாம் ..கையிலே விவரம் தெளிவாக இருக்குமாம்)
     3) குழுக்களாக அல்லது குடும்பத்தினரோடு பயணம் செய்பவர்கள்
                 4) உறங்குவதற்காகவே ஊர்;சுற்ற புறப்படுபவர்;கள் (வீட்டிலேயே தூங்கலாம் இல்ல)
                 5) குறிப்பிட்ட பொருள் அல்லது செடி, கொடிகளுக்காக வேட்டை வெறியோடு செல்லும் வேட்டைக்காரர்கள்
                 6) சென்ற இடத்தில் தங்கும் அறைகளில் உள்ள ஐன்னல் வழியே மேகங்களைப்ப பார்ப்பதற்கும், நித்திர தேவியின் அரவணைப்பிற்கும் சாய்வு நாற்காலியில் உட்காh;ந்து செய்தித்தாட்களை புரட்டி..புரட்டி. பார்ப்பவர்களாம்
                                அமரிக்காவில் எல்லோருமே அறிவாளிகள் என்றுதானே நினைத்துக் கொண்டிருக்கிறோம்..ஆனால் ஆங்கே அறிவியல் அறிவீலிகள் 75 சதவீதம் பேர் இருக்கிறார்களாம். கூட்டல் கழித்தல் தெரியாதவங்களுக்கு என்னங்க பேர் வைக்கலாம்  (Innumeracy)-ன்னு வைக்கலாமாம்
                               
                                குறி சொல்பவர்கள் ஒரு இலட்சத்துக்கும் அதிகமா இருக்காங்களாம். ஆட நம்மூர்ல இல்லைங்கோஐப்பான்லதான்.
                                நாம் சாப்பிடும் உணவு ஜீரணம் பண்ண வுpர்Pயு iஉறடிராகுளோரிக் அமிலம் பயன்படுகிறது. ஆனால் நம் வயிற்றை அது பதம்பாh;த்து எhpப்பதில்லை ஏன்?
                                நேனோ..நேனோ என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள்அது என்னவென தெரியுமா?
                                “ அணுக்களை தனித்தனியாக பகுத்து அணிவகுக்க செய்து அடையாளம் தெரியாத சிறிய இடத்தில் கூட மிகப்பொpய செய்திகளை பதிவு செய்வதற்கும் மாலிக்கியுல் அளவிற்கு இயந்திரங்களைள உருப்பெற செய்வதே நேனோ தொழில் நுட்பம் ஆகும்.
                                 பில்கேட்ஸ் நான்காவது படிக்கும் பொழுது அவாpன் ஐ.ஞ 170-ஐ தாண்டி இருந்ததாம்.
Infinity- என்ற ஆங்கில சொல்லின் பொருளை வேறொரு சொல்லால் எந்த மொழியாலும் சிறப்பாக வெளிப்படுத்த இயலாது.
                 கம்பூயட்டர் புரட்சி என்னவெல்லாம் செய்யும் தெரியுமா?
               
                                     1) கருத்துத் திருட்டு   2) அந்தரங்கங்கள் ஆக்கிரமிப்பு,  ஏமாற்றுதல்                4) செய்திகள் சேதப்படுதல்                5) பணிக்குறைப்பு இதெல்லாம் நடந்துட்டுதாங்க இருக்கு)
                                செஸ்-போர்டில் 64 கட்டங்கள் இது தெரியாதா என்பீர்கள் அதுவல்ல விசயம்….
                                முதல் கட்டத்தில் 1 தானியம் 2-வது கட்டத்தில் இரண்டு இப்படியே இரட்டிப்பா வைத்தோமென்றாதல் மொத்தம் 18,446,774,073,709,551,615 தானியங்கள் தேவைப்படும் இவற்றினை எண்ணுவதற்குள் பிரபஞ்ச வயதே போறாதாம்
                நிறங்கள் பற்றி நிறையவே இந்நூலில் பேசப்பட்டீருக்கு இடந்தான் போறாது.
                சிவப்பு நிறும்- காதலிலும் போரிலும் எவ்லாமே நியாயமானவையாம் பாலுவணர்வின் நிறம் சிவப்பு
                சிவப்பு விரிப்புக்கள் இராஐபாதைகளை சித்தரிப்பது….கால்களுக்கு அடியில்….ஆனால் கம்பளங்களை இழுத்து விட்டால் மண்ணைக் கவ்வுவதை; தவிர வேறு வழி….விழிப்பா இருக்கணும் போல இருக்கே
    பச்சை: ..இயேசு கிருஸ்து சிலுவையில் அறையப்பட்ட பின்னர் குருதியை மரகதப்பச்சை நிறத்தில் சேமித்தார்களாம்..
                சாம்பல் நிறும்,- துயரம் நிறைந்த உலகத்தின் பிரதிபலிப்பு அதனுள்ள எல்லா நிறங்களும் வீழ்ந்து ஆழ்ந்து விடுகின்றனவாம்…. விபூதியை கொஞ்சம் நினைச்சுப் பாருங்கோ..
                 நான் என்ற சொல் இருக்கு பாருங்கோ..அது அகங்காரத்தின்       அடையாளம் நம்முடையப் பார்வை குகைப் பார்வையாம் அதனை விரிவுப்படுத்தினால் புதிய வாய்ப்புக்கள் புலப்படும்.
                  உள்ளுணர்வு ஒன்பது வகையாக பிரிக்கப்பட்டிருக்காம்.  அதன் தன்மைகளை விரிவாக விளக்கியுள்ளார் நூல் ஆசிரியர்.
 கரஉறரப்பிரியாவின் ஸ்வர ஸப்தகம் அகிக உலக இசையில் இருப்பதையும் கிரேக்க இசை ஆரேபிய இசையிலும் காணப்படுவதாக சுட்டிக்காட்டி உள்ளளார்
தமிழிசையைத் தலைநிமிரச் செய்ய வேண்டும் என்று பாடுபட்ட இசை மேதைகளில் குறிப்பிடத்தக்கவர்;  மு. ஆபிரகாம் பண்டிதா;. குருட்டு மூலிகைப் போல இவர் மறக்கப்பட்ட மாமனிதர்
                காலை, நடுப்பகல், மாலை, இரவு முதலிய நேரங்களில் பாடுவதற்கெனவே ராகங்கள் வகுக்கப்பட்டுள்ளது
                ஆதிகாலை நேரத்தில் இறைவனை போற்றி பாடுவதற்கு பூபளாம், பொளளி, பிலகரி இராகங்கள்
                முடிவில் மங்களம் பாடுவதற்கு, சுருட்டி, மத்யாமவதி, சௌராட்டிரம் போன்ற இராகங்கள் .
                                இன்னமும் பயனள்ள ஏராளமான கருத்துப் புதையல்கள் அடங்கியுள்ள பனித்துளிகள் ஒரு பாற்கடல்என்ற நூல்  உண்மையிலேயே பாற்கடல்தான்.
                                நூலாசிரியர் காக்கிச் சட்டைக்காருங்கோ…. காவல் துறைத் தலைவா; ஐ. இரவி ஆறுமும் அவர்கள்.  (காக்கிச் சட்டைக்குள் காவியமா! ஆச்சர்யத்தில் அசந்து போனேன்)
                                பயனள்ள இந்நூல் எல்லோர் கையில் தவழவே ….இந்த நூல் நயமாகும் வணிக நோக்கம் ஏதுமில்லை!
                                இந்நூல் நர்மதா வெளியீடு முதல் பதிப்பு 1998-லும் இரண்டாம் பதிப்பு 2003-லும்  வெளியாகி உள்ளது. விலை ரூ.190 மட்டும்தான் பக்கங்கள் 350 (இப்போதுள்ள விலை ?)
                                                                             --- கே. அசோகன்.


Related Posts Plugin for WordPress, Blogger... Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...