வியாழன், 18 பிப்ரவரி, 2016

வசமாவது எப்போது ? காதல் கவிதை

வசமாவது எப்போது

முகில் சுமந்த
நீர்த் துளிகள்
மழையானது!

மார்கழியிலோ
அவை
பனித் துளிகளானது!

பனித் துளிகள்
சுமந்த
மலர்களோ
வாசமானது!

வாசமான
மலர்களோ
மங்கையர்
வசமானது!

மலர்கள்
வசமான
மங்கையோ
என் இனிய
காதலியாய்
வசமாவது
எப்போது ?


---- கே. அசோகன்

3 கருத்துகள்:

  1. பாராட்டுதலுக்கு நன்றி, நண்பர்களுக்கும் பகிருங்கள்

    பதிலளிநீக்கு
  2. நண்பரே கவிதை அருமை....
    அற்புதமான வார்த்தைகளை
    அதிசயமாய் கோர்த்து இருக்கிறீர்...

    பதிலளிநீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...