இனிய கவிதை உலா

இனிய கவிதை உலா இனிதே வரவேற்கிறது கவிதைகள், சிறுகதைகள், பயனுள்ள தகவல்

வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

நீயும் பெண்தானே !

நீயும் பெண்தானே!

குளிர்நிலவே நீயேன்
குளிர்கின்றாய்என்
தளிர்மேனியை தினம்
தகிக்காதடி!

பளிரென மின்னும்
பளிங்கு வதனமதை
நலிவுறு செய்தே….
குளிராதடி!

மேகமதில் நீதழுவும்
நேரமதில்என்
தேகம்தனில் இளஞ்
சூடேறுதடி

நீயென் தாகம்தனை
மூட்டி விட்டே….
தனியே செல்லாதடி!

மோகனராகம் மீட்டிட
மோகித்தவனை
கூட்டி வாடி!
நிலவே….!
நீயும் பெண்தானே!


--- கே. அசோகன்.


Related Posts Plugin for WordPress, Blogger... Related Posts Plugin for WordPress, Blogger...

7 கருத்துகள்:

 1. "மோகனராகம் மீட்டிட
  மோகித்தவனை
  கூட்டி வாடி!
  நிலவே….!
  நீயும் பெண்தானே!
  " என
  அழககாகச் சொன்னீர்கள்

  பதிலளிநீக்கு
 2. பதில்கள்
  1. நி்லவு பெண் என புரிந்ததற்கு மிக்க நன்றி

   நீக்கு
 3. நிலவை ரசித்தேன் நண்பரே.... தொடரட்டும் குளிர் கவிதை...

  பதிலளிநீக்கு
 4. பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   நீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...