இனிய கவிதை உலா

இனிய கவிதை உலா இனிதே வரவேற்கிறது கவிதைகள், சிறுகதைகள், பயனுள்ள தகவல்

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

பேறுபதினாறு பெறலாம்

பேறுபதினாறு பெறலாம்

கண்ணின்வழி காட்சிகள் பலவும்
கவிதைவழி கருத்துகள்  பெறலாம்!
பெண்ணின்வழி தாய்மை உணர்வு
பூக்கள்வழி வாசமும் பெறலாம்!


விண்ணின்வழி மழைபனியும்
வெளிச்சமும் நன்றாய் பெறலாம்
காவின்வழி தழுவும் தென்றல்
தருக்கள்தரும் கனிகளும் பெறலாம்!

ஆற்றின்வழி நல்பாசனம், நாம்
அருந்த நல்நீரும் பெறலாம்!
ஆற்றல்வழி வெற்றி பலவும்
அடைந்திட வசந்தம் பெறலாம்!

அமைதிவழி மகிழ்ச்சி நன்மை
ஆண்டவனின் அருளும் பெறலாம்!
சமையல்வழி அருஞ்சுவை உணவும்
சாப்பிட்டு உடல்நலமும் பெறலாம்!

காற்றின்வழி தென்றல் குளுமை
களித்திட என்றும் பெறலாம்!
நாற்றின்வழி கதிர்முற்றி நல்ல
தானியங்கள்  நாமும் பெறலாம்!

அன்புவழி ஒழுக்கம் மேன்மை
அருந்தவ பயனும் பெறலாம்
பண்புவழி பாசம் நேசம்
பரிவுடன் என்றும் பெறலாம்

உழைப்புவழி உயர்ந்த வாழ்வும்
உன்னத நலனும் பெறலாம்!
எண்ணும்வழி மேன்மை யானால்
இனிதே பேறுபதினாறு  பெறலாம்!
----- கே. அசோகன்.




Related Posts Plugin for WordPress, Blogger... Related Posts Plugin for WordPress, Blogger...

10 கருத்துகள்:

  1. கவிதை வரிகள் அருவியாய் கொட்டுகின்றன நண்பரே தொடர்ந்து பொழியட்டும் கவிதை மழை, நனைந்திட காத்திருக்கின்றேன் வாழ்த்துகள் - தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீண்டும் நன்றி, இன்னும் வரும்...வரும்...வந்துகொண்டே இருக்கும் ஊக்கப்படுத்துங்கள்

      நீக்கு
  2. உங்கள் மூலமாய் ,இது போன்ற கவிதைகள் ஆயிரம் பெறலாம் என காத்திருக்கிறன் :)

    பதிலளிநீக்கு

கருத்துகளை வழங்கலாமே! ஊக்கமாய் இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...